மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக 4427 வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம்!

கோவை: மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக கோவை மாவட்டம் முழுவதும் 4427 வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை: மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக கோவை மாவட்டம் முழுவதும் 4427 வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி கோவை 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்முறை கொரோனா வைரஸ் தொற்றினை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் 1050 க்கு அதிகமான வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதலாக துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

10 தொகுதிகளிலும் வாக்காளர்கள் எவ்வித சிரமமின்றி வந்து வாக்களிக்கும் விதமாக வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கோடை காலம் என்பதால் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஒய்வெடுக்கும் வகையில் தற்காலிக நிழற்குடை அல்லது சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிமையாக வாக்குப்பதிவில் பங்கேற்கும் விதமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் மூலமாக சக்கர நாற்காலிகளும் அனுப்பப்பட்டுள்ளன.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...