கோவை: தண்டு மாரியம்மன் சாட்சியாக இந்து மதத்தையும், பெண்களையும் மதிக்காத, எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என விளக்கு பூஜை செய்து பெண்கள் சத்தியபிரமாணம் செய்தது, கோவை பிஜேபி முகநூல் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், கோயில் பூசாரி ஒருவர், "என்னுடைய தெய்வத்தையும், நாம் தெய்வமாக போற்றும் பெண்களையும் இழிவுபடுத்தும்,
எந்தவொரு அரசியல் கூட்டணி கட்சிகளுக்கு, இந்த தேர்தல் மட்டுமல்லாது எந்த தேர்தல்களிலும், நான் வணங்கும் குலதெய்வத்தின் சாட்சியாக, நான் நம்பும் தெய்வத்தின் மீது ஆணையாக, இங்கே இருக்கும் தண்டுமாரியம்மன் சாட்சியாக, இங்கே இருக்கும் தெய்வத்தின் அக்னி சாட்சியாக, ஒருபொழுதும் நானும் என்னுடைய குடும்பத்தாரும், என்னை சார்ந்தவர்களும் வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி ஏற்கிறேன், என்கிறார், அதை அங்கு விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களும் அதை வழிமொழிந்தனர்.
இதைப்பற்றி நாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் விசாரித்தபோது, இந்த வீடியோவில் சொல்லக்கூடிய தண்டுமாரியம்மன் இதுவல்ல என்றும். தண்டுமாரியம்மன் கோவில்கள் கொங்கு மண்டலத்தில் நிறைய இடத்தில் இருப்பதால் வேறு எங்காவது நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம், என தெரிவித்தனர்.