கோவை: கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
கோவை: கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 12 மணி நேரம் இடைவெளியின்றி நடத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் 1050 வாக்கு மையங்கள் 4427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
10 தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கிருந்து அனுப்பப்படுகின்றன.
ஒவ்வொரு தொகுதியைச் சேர்ந்த வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இன்று மாலைக்குள் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு லாரிகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு சக்கர நாற்காலி மற்றும் இதர உபகரணங்கள் போன்றவை அனுப்பப்படுகின்றன.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குபதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லும் போது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய காவலர்களும் உடன் அனுப்பப்படுகின்றனர்.