கோவை: பொள்ளாச்சியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பெட்டி இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பொள்ளாச்சியில் 318 வாக்குச்சாவடி மையங்களும் வால்பாறையில் 294 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்கள் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் துணை ராணுவப் படை மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்கின்றன.