கோவையில் வாக்குச்சாவடி பாதுகாப்புப் பணியில் 5,000 போலீசார்..! வாக்கு எந்திரம் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது!

கோவை: கோவை மாவட்டத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்காக வாக்கு எந்திரங்கள் சீலிடப்பட்ட பைகள் பாதுகாப்பாக தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் எடுத்து வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்காக வாக்கு எந்திரங்கள் சீலிடப்பட்ட பைகள் பாதுகாப்பாக தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் எடுத்து வைக்கப்பட்டது. அதை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அந்தந்த வாக்குச் சாவடிக்கு அனுப்பிவைத்தனர்.

கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவை மாவட்டத்தில் 4,477 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. இங்கே தேவையான இயந்திரங்கள் கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் விவிபேட் கருவிகள் இன்று மதியம் சப்ளை செய்யப்பட்டது.

இந்நிலையில், சட்டமன்ற தொகுதிக்கு மண்டல வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இன்று காலை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. யார் யாருக்கு எந்தெந்த வாக்குச்சாவடி என அவர்களுக்கான உத்தரவும் அளிக்கப்பட்டது.

மேலும், பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி சென்று பொறுப்பேற்க வேண்டும். மதியம் முதல் நாளை வாக்குப்பதிவு முடிவு வரை வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும். இன்று இரவும் வாக்குச்சாவடியில் தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் இன்று ஒரு காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பார். மாவட்ட அளவில் இன்று சுமார் 5,000 போலீசாரும் நாளை மாவட்ட அளவில் சுமார் 10 ஆயிரம் போலீசாரும் பணியில் இருப்பார்கள்.

அதேபோல, மாவட்ட அளவில் இன்று முதல் தேர்தல் பிரிவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட அளவில் 861 ஒரு பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளன என் வெப்கேமரா மீது வாக்குப்பதிவு விவரங்கள் கண்காணிக்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...