பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்கின்றனர்.
வால்பாறையை சேர்ந்த பலர் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலர் வால்பாறைக்கு திரும்பி வருகின்றனர்.
இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வால்பாறை செல்வதற்காக வந்தவர்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இதனால், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பலர் நீண்ட நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு சில பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் அந்தப் பேருந்துகளில் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு கூட்ட நெரிசலில் பேருந்துகளில் ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே வால்பாறைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.