கோவை: கொரோனா மீண்டும் தீவிரமாக பரவுவதைத் தடுக்க திருமணங்கள், விஷேசங்களில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் படி கோவை மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
: கோவை: கொரோனா மீண்டும் தீவிரமாக பரவுவதைத் தடுக்க திருமணங்கள், விஷேசங்களில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் படி கோவை மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோவையில் கடந்த ஜனவரி மாதம் வரை கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 250க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தான் 75 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இதனிடையே கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுமக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எனவே பொது இடங்களுக்கு செல்லும் மக்கள், அவ்விடத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அங்குள்ள அனைத்து அலுவலர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். திருமணங்கள் மற்றும் விஷேசங்களில் அதிக அளவில் கூட்டம் சேர்வதை தவிர்த்திட வேண்டும். பொதுமக்கள் சாலைகளில் எச்சில் துப்பாமல் இருக்க வேண்டும்” என்றுதெரிவித்துள்ளார்.