கோவை: கோவை மாவட்டத்தில் வாக்கு எந்திரம் வைக்கப்படும் ஸ்டிராங் ரூம் எப்படி உள்ளது என்பது குறித்து தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, மாலை வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு 28 நாட்கள் இடைவெளி உள்ளது.
இந்நிலையில், தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு இயந்திரம் வைத்துப் பாதுகாக்கப்படும் ஸ்ட்ராங் ரூம் எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி (ஜி.சி.டி.,) வளாகத்தை, தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் சுகுமார் டோப்போ ஆய்வு செய்தார். கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் பதிவாகும் ஓட்டுகள், ஜி.சி.டி.,யில் எண்ணப்படும். ஓட்டுப்பதிவுக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, கல்லுாரி வளாகத்தில் உள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' பத்திரப்படுத்தப்பட்டு, அரசியல் கட்சி ஏஜன்ட்டுகள் முன்னிலையில், 'சீல்' வைக்கப்படும்.
பின்னர், மே 2ம் தேதி வரை 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர். 'சிசிடிவி' கேமரா பொருத்தி, மெகா சைஸ் மானிட்டரில் கண்காணிக்கப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கு ஏஜன்ட்டுகள் வருவதற்கு தனி வழி, அலுவலர்கள் செல்வதற்கு தனி வழி ஏற்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், இப்பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் சுகுமார் டோப்போ, தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்மணியம் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையில், ஜன்னல்கள் மூடப்பட்டு, குறுக்காக மரச்சட்டங்களால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா, அத்துமீறி உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என, பார்வையிட்டார். ஏஜன்ட்டுகள், அலுவலர்களுக்கு கழிப்பறைகள் இருக்கின்றனவா என பார்வையிட்ட அவர், தண்ணீர், உணவு ஏற்பாடு செய்ய, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.