கோவை: சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் அடுத்தநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்து இயந்திரங்களை ஒப்படைத்த பிறகே, அலுவலர்கள் வீடு திரும்ப முடியும். முன்பு, பள்ளி கோடை விடுமுறை அல்லது வார இறுதியில், பெரும்பாலும் தேர்தல் நடத்தியதால், அடுத்தநாள் ஓய்வு எடுத்த பிறகு, அலுவலர்கள் பணிக்கு திரும்புவர்.
இந்நிலையில், தற்போது பணிநாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஓட்டுப் பதிவு நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்தநாள் விடுப்பு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் கூறுகையில், 'தேர்தலுக்கு அடுத்தநாள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என அதிகாரிகள் வாய்வழியாக தான் தெரிவிக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், ஆசிரியர்கள் மத்தியில், பணிக்கு திரும்ப வேண்டுமா என்ற குழப்பம் உள்ளது. கிட்டத்தட்ட, 12 மணி நேர தேர்தல் பணிக்கு பிறகு, ஓய்வு தேவைப்படுவதால், வரும் 7ம் தேதி, விடுமுறை அறிவிக்க வேண்டும்,' என்றார்.