கோவை: கோவை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில், 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள், ஓட்டளிக்கத் தயாராக உள்ளனர். 10 தொகுதிகளிலும், மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் ஆண்கள் 15,19,027, பெண்கள் 15,62,573, மூன்றாம் பாலினத்தவர் 428, மொத்த வேட்பாளர்கள் 137, ஓட்டுச்சாவடி மையங்கள் 1,085, ஓட்டுச்சாவடிகள் 4,427, பதற்றமுள்ள ஓட்டுச்சாவடி 861, மாதிரி ஓட்டுச்சாவடிகள் 10, தேர்தல் பணி அலுவலர்கள் 2,1256, நுண் பார்வையாளர்கள் 318 பேர் ஆகும்.
கடந்த ஒரு மாதமாக கோவையில் நீடித்த தேர்தல் அனல் நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது. 10 தொகுதிகளிலும், 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள் அளிக்கப்போகும் தீர்ப்பை எதிர்பார்த்து, 137 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதி செய்வது, 100 மீட்டர், 200 மீட்டர் அடையாளத்தை கோடிட்டுக் காட்டுவது, பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகள் நேற்று நடந்தன.
மேலும், வாக்காளர் காத்திருக்க வசதியாக, பந்தல்கள் இன்று அமைக்கப்பட உள்ளன. மின்னணு ஓட்டு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள், வெவ்வேறு வகை உறைகள், படிவங்கள், சீல் வைக்கும் பொருட்களுடன் இன்று அலுவலர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்கின்றனர். தலைமை அலுவலர் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் அலுவலர்கள், இன்றிரவு, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் தங்கிக்கொள்வர்.
அதேபோல, நாளை அதிகாலையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவுடன் அவர்களது பணி துவங்கும். கொரோனா காலம் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சானிட்டைசர், கையுறை, முக கவசம் ஆகியவை பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், வலது கையில் அணிய, கையுறை வழங்கப்பட உள்ளது. இவை அனைத்தும் இன்று தொகுதிகளுக்கான பாதுகாப்பு அறைகளில் இருந்து, அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட உள்ளன.
தேர்தல் ஏற்பாடுகள், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மத்திய தேர்தல் பார்வையாளர்கள் மேற்பார்வையில் நடந்து வருகின்றன.