சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் திருப்பூர் மாவட்டம்..! முழு விவரம் இதோ!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி(தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம்(தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள் 11,66,417, பெண் வாக்காளர்கள் 11,93,104 மற்றும் மூன்றாம் பாலினம் 283 என மொத்தம் 23,59,804 வாக்காளர்கள் உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி(தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம்(தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள் 11,66,417, பெண் வாக்காளர்கள் 11,93,104 மற்றும் மூன்றாம் பாலினம் 283 என மொத்தம் 23,59,804 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,343 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாவட்டத்தில் தாராபுரம் தொகுதியில் 14 பேர், காங்கயத்தில் 26 பேர், அவிநாசி தொகுதியில் 12 பேர், திருப்பூர் வடக்கு தொகுதியில் 15 பேர், திருப்பூர் தெற்கில் 20 பேர், பல்லடத்தில் 20 பேர், உடுமலை தொகுதியில் 15, மடத்துக்குளம் தொகுதியில் 15 என மாவட்டம் முழுவதும், 8 சட்டப்பேரவைத் தொகுதியில் 137 பேர் களத்தில் உள்ளனர்.

திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் காங்கயம் ஆகிய மூன்று தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைந்தபட்சம் 15 வேட்பாளர்களுக்கான சின்னங்களும், ஒரு நோட்டாவுக்கான சின்னமும் இடம்பெறும். திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் காங்கயம் தொகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இடம்பெறுவதால், மேற்கண்ட தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் 124 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில், பணிபுரிய உள்ள 168 நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டத்தில் அதிகபட்சமாக உடுமலை தொகுதியில் 22 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 124 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 168 நுண் பார்வையாளர்கள்(மைக்ரோ அப்சர்வர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்டம் முழுவதும் 16,044 பேர் தபால் வாக்குகளை பெற்றிருந்தனர். மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் 3,871 வாக்காளர்கள் கோரியிருந்தனர். மாவட்டம் முழுவதும் 1500 போலீஸார் மற்றும் மாநகரில் சுமார் 800 போலீஸார் இவர்களுடன் துணை ராணுவப்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மாவட்டம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் தவிர தேர்தல் பணியில் 17,500 ஊழியர்கள், அலுவலர்கள் என மாவட்டம் முழுவதும் பணி செய்ய உள்ளனர்.

இதனிடையே, மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் 297 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...