கோவை: கோவை தெற்கின் முகமாக மாற கமல்ஹாசன் முதலில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று இறுதிகட்ட பிரச்சாரத்தில் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை டாடாபாத் ஆறுமுக்கு பகுதியில் தொண்டர்கள் முன்பாக உரையாடி தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக அரசு அனைத்து மக்களுக்கான அரசாக இருந்து வந்திருக்கிறது. மேலும் கடந்த ஆறு ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பல முன்னேற்றங்களை கண்டுள்ளனர். நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவர் பிரதமர் மோடி.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆட்சி கலைந்து விடுமென்ற திமுக தலைவர் ஸ்டாலினின் கனவினை அடித்து நொறுக்கி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நலனுக்காக இந்த ஆட்சி தொடர வேண்டும்.
உலக நாடுகள் கையாண்டதை விட கொரோனா காலத்தை மோடி அரசு சிறப்பாக கையாண்டது, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து மக்களுக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது இந்தியா.
கடந்த 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 5 ஆண்டு காலத்தில் 430 நாட்கள் மக்கள் சேவைக்காக ரயிலில் பயணம் செய்து ரயிலிலேயே வழங்கியுள்ளேன். எனக்கும் குடும்பம் உள்ளது. எனது குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமயங்களிலும் மக்கள் பணியிலேயே ஈடுபட்டுள்ளேன்.

அரசியல் என்பது மக்கள் சேவை என்று எங்கள் கட்சியில் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் கோவை மக்களுக்கு செய்த பணிகளின் பட்டியலை என்னால் சொல்ல முடியும். அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதிக்கு செய்த பணிகளை சொல்ல முடியுமா? கோவை தெற்கு முகமாக மாற வேண்டுமென்றால் கமல்ஹாசன் மக்களின் உணர்வுகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் சக வேட்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தேர்தல் என்பது போர்க்களம் அல்ல என்கிறார். அதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம், மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் வாய்ப்பாகவே அரசியலை நாங்கள் பார்க்கிறோம்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் நான் தோல்வியுற்றாலும் அதை பெரிதாக கருதாமல் எனது வழக்கறிஞர் பணியைத் துறந்துவிட்டு, மக்கள் பணிக்காக 5 ஆண்டுகளாக கோவை தெற்கு தொகுதியில் மக்கள் சேவை மையம் என்ற மையத்தை நிறுவி அதன் வாயிலாக மக்களுக்கு பல சேவைகளை செய்து உள்ளேன். அதன் ஒரு பகுதியாக 45 நிகழ்ச்சிகளை பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நடத்தியுள்ளேன்.
திமுக தொடர்ந்து பெண்களை இழிவு செய்யும் கட்சியாக உள்ளது. ஆனால், பாஜக பெண்களை மதிக்கும் கட்சியாக உள்ளது. அதனால் தான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த என்னை மாதிரியான பெண் தேசிய மகளிர் அணியின் தலைவியாக பதவி ஏற்க முடிந்துள்ளது.
அம்மா (ஜெயலலிதா) இல்லாத இந்த சூழலில், இந்த தொகுதியில் உங்கள் அக்காவாக பணிபுரிய விரும்புகிறேன், இந்த நல்லாட்சி தொடர மீண்டும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சியமைக்க வேண்டும்.
மத்திய அரசின் பல திட்டங்களை இந்த தொகுதிக்கு என்னால் பெற்றுத்தர முடியும், அவற்றை சாத்தியமாக்கி காட்ட வரும் தேர்தலில் கோவை தெற்கு தொகுதி மக்கள் தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.