உங்கள் அக்காவாக பணிபுரிய விரும்புகிறேன் - இறுதிகட்ட பரப்புரையில் வானதி சீனிவாசன் பேச்சு

கோவை: இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை டாடாபாத் ஆறு முக்கு பகுதியில் தொண்டர்கள் முன்பாக உரையாடி தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.


: கோவை: இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை டாடாபாத் ஆறு முக்கு பகுதியில் தொண்டர்கள் முன்பாக உரையாடி தனது இறுதிகட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:



கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக அரசு அனைத்து மக்களுக்கான அரசாக இருந்து வந்திருக்கிறது. மேலும், கடந்த ஆறு ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பல முன்னேற்றங்களை கண்டுள்ளனர். நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவர் பிரதமர் மோடி.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், ஆட்சி கலைந்து விடுமென்ற திமுக தலைவர் ஸ்டாலினின் கனவினை அடித்து நொறுக்கி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நலனுக்காக இந்த ஆட்சி தொடர வேண்டும்.

உலக நாடுகள் கையாண்டதை விட கொரோனா காலத்தை மோடி அரசு சிறப்பாக கையாண்டது, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து மக்களுக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது, இந்தியா.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 5 ஆண்டு காலத்தில் 430 நாட்கள் மக்கள் சேவைக்காக ரயிலில் பயணம் செய்து ரயிலிலேயே வழங்கியுள்ளேன். எனக்கும் குடும்பம் உள்ளது, எனது குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமயங்களிலும் மக்கள் பணியிலேயே ஈடுபட்டுள்ளேன்.



அரசியல் என்பது மக்கள் சேவை என்று எங்கள் கட்சியில் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் கோவை மக்களுக்கு செய்த பணிகளின் பட்டியலை என்னால் சொல்ல முடியும். அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு, கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதிக்கு செய்த பணிகளை சொல்ல முடியுமா? கோவை தெற்கு முகமாக மாற வேண்டுமென்றால், முதலில் கமல்ஹாசன் மக்களின் உணர்வுகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் சக வேட்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில் தேர்தல் என்பது போர்க்களம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். அதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்். மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் வாய்ப்பாகவே அரசியலை நாங்கள் பார்க்கிறோம்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் நான் தோல்வியுற்றாலும், அதை பெரிதாக கருதாமல் எனது வழக்கறிஞர் பணியைத் துறந்துவிட்டு, மக்கள் பணிக்காக 5 ஆண்டுகளாக கோவை தெற்கு தொகுதியில் மக்கள் சேவை மையம் என்ற மையத்தை நிறுவி அதன் வாயிலாக மக்களுக்கு பல சேவைகளை செய்து உள்ளேன். அதன் ஒரு பகுதியாக, 45 நிகழ்ச்சிகளை பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நடத்தியுள்ளேன்.

திமுக தொடர்ந்து பெண்களை இழிவு செய்யும் கட்சியாகவே உள்ளது. ஆனால், பாஜக பெண்களை மதிக்கும் கட்சியாக உள்ளது, அதனால் தான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த என்னை மாதிரியான பெண் தேசிய மகளிர் அணியின் தலைவியாக பதவி ஏற்க முடிந்துள்ளது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...