கோவையில் கரும்புகடை பகுதியில் பிரச்சாரத்தின் போது திமுக-அதிமுக இடையே தள்ளு முள்ளு; 12 பேர் காயமடைந்ததாக தகவல்

கோவை: கோவை கரும்புகடை பகுதியில் பிரச்சாரத்தின் போது அமைச்சர் வேலுமணி குறித்து கோஷம் எழுப்பியதால், திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.


: கோவை: கோவை கரும்புகடை பகுதியில் பிரச்சாரத்தின் போது அமைச்சர் வேலுமணி குறித்து கோஷம் எழுப்பியதால், திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதில் 12 பேர் காயமடைந்ததாக, அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர், என்று கூறப்படுகிறது.

இன்று மாலை, கரும்புகடை பகுதியில் திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பார்த்து, டவுன் டவுன் (down, down) வேலுமணி என அமைச்சருக்கு எதிராக திமுகவினர் முழக்கம் எழுப்பியதாதாக கூறப்படுகிறது.. இதனால், திமுக மற்றும் அதிமுக என இரு கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அவர்களை சமாதானபடுத்த காவல்துறை முயற்சி மேற்கொண்டனர். இருந்தபோதும், தொடர்ந்து, தள்ளு முள்ளு காரணமாக இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதற்கிடையே, காயம் அடைந்தவர்களை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், சண்முகசுந்தரம் எம்பி, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோர் சென்று ஆறுதல் கூறினர்.



இதனையடுத்து, அரசு மருத்துவமனையிலும் இரு திருப்பு சேர்ந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கும் பரபரப்பு நிலவியது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...