சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் இறுதிக்கட்ட பரப்புரை!

கோவை; சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் இறுதிகட்டப் பரப்புரையை நிறைவு செய்தனர்.



:கோவை; சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் ஆட்டம் பாட்டத்துடன் இறுதிகட்டப் பரப்புரையை நிறைவு செய்தனர்.

தேர்தல் பரப்புரைக்கு கடைசி நாளான இன்று சிங்காநல்லூர் தொகுதியில் அனைத்து அரசியல் கட்சிகளும் காலை முதலே மிகுந்த விறுவிறுப்புடன் பரப்புரையில் ஈடுபட்டனர்.

மாலை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தனித்தனி இடங்களில் சரியாக 7 மணிக்கு நிறைவுறும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தினர்.



தேர்தல் ஆணையம் விதித்த கெடுவுக்குள் பரப்புரைகள் நிறைவு அடைந்தன. அதிமுக வேட்பாளர் கே. ஆர். ஜெயராம் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் அருகே இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார்.



திமுக வேட்பாளர் கார்த்திக் மசக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பரப்புரையை நிறைவு செய்தார்.



மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் நஞ்சுண்டாபுரம் பகுதியிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நர்மதா சிங்காநல்லூர் பகுதியிலும் சுயேச்சை வேட்பாளர் கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிராஜ், ஜீ.வி ரெசிடென்சி தன விநாயகர் கோயில் அருகிலும் பரப்புரைகளை நிறைவு செய்தனர்.



இறுதி நாள் என்பதால் சிங்காநல்லூர் தொகுதி முழுவதும் காலை முதல் மாலை வரை இடைவெளி இல்லாமல் பரப்புரை நடைபெற்றது. தொகுதி முழுவதும் மேளதாளம் முழங்க வாகனங்களில் ஒலிபெருக்கி ஒலி எழுப்ப, கலைஞர்கள் நடனமாட ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பரப்புரை நிறைவு பெற்றது.



Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...