ஒரே பகுதியில் அதிமுக-திமுகவினரின் இறுதிகட்ட பரப்புரையால் பதற்றம்!

கோவை: கோவை வடக்கு தொகுதியில் ஒரே இடத்தில் அதிமுக-திமுகவினர் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டதால் மோதல் ஏற்படும் சூழலால் பதற்றம் ஏற்பட்டது.


கோவை: கோவை வடக்கு தொகுதியில் ஒரே இடத்தில் அதிமுக-திமுகவினர் இறுதி கட்டப்பரப்புரை மேற்கொண்டதால் மோதல் ஏற்படும் சூழலால் பதற்றம் ஏற்பட்டது.

சட்டமன்றப் பொதுத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 7 மணியுடன் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் பரப்புரையை முடித்துக் கொண்டனர்.

கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் மாலை 6 மணி முதல் ஆறு முப்பது மணி வரை திமுக வேட்பாளர் சண்முகசுந்தரமும் ஆறு முப்பது மணி முதல் 7 மணி வரை அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனும் பரப்புரை மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதிமுகவினர் அந்த பகுதியில் வந்து தங்களது பரப்புரை வாகனத்தை நிறுத்தியதுடன் தங்களது கட்சி தொண்டர்களையும் திரட்டியிருந்தனர்.

இந்த நிலையில் சுமார் ஆறு மணி 20 நிமிடம் அளவில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் தனது ஆதரவாளர்களுடன் அந்த பகுதியில் இறுதிகட்டப் பரப்புரையில் ஈடுபடுவதற்காக வந்தார்.



அப்போது அதிமுக வினர் திமுகவினரை பார்த்து கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதேபோல் பதிலுக்கு திமுகவினரும் கோஷம் எழுப்பியதால் இரு தரப்பினரிடையே மோதல் எழும் சூழல் உருவானது.



அங்கிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேசி சமாதானம் செய்தனர். பின்னர் ஒரே இடத்தில் இரண்டு வேட்பாளர்களும் நின்று கொண்டு தங்கள் ஆதரவாளர்களுடன் மாறி மாறி கோஷங்களை எழுப்பியும் மேளதாளம் முழங்கவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் "அதிமுகவினரின் அராஜக போக்கிற்கு காலம் பதில் சொல்லும். அனைவரும் எந்த பிரச்சினையிலும் ஈடுபடாமல் கலைந்து செல்ல வேண்டும்" என தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதேவேளையில் பிரச்சாரத்திற்கான நேரம் முடிவடைந்ததால் அதிமுகவினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இரு கட்சியினரும் அதிக அளவில் திரண்டிருந்ததால் அந்தப் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...