கோவை: கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து சென்று கடைசி கட்ட பரப்புரை மேற்கொண்டார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று மாலை 7 மணி வரை இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டனர். அதன்படி இன்று காலை முதலே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று மாலை சுந்தராபுரம் பகுதி முழுவதும் நடை பயணமாக சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் புடைசூழ போத்தனூர் ரயில் நிலையம் முன்பு தொடங்கிய நடைபயணம் சாரதா மில் சாலை, பொள்ளாச்சி சாலை, மதுக்கரை சாலை வழியாக சுந்தராபுரம் சுங்கம் வீதி வழியாக சென்றது. அப்போது மக்களிடம் குறிச்சி பிரபாகரன் வாக்கு சேகரித்தார். இறுதியில் சுந்தராபுரம் சுங்கம் வீதியில் இறுதி கட்ட பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.