பொள்ளாச்சி: கிணத்துக்கடவு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட போது பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி தயாநிதி மாறன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கடந்த மார்ச் 29ம் தேதி மாலை திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான தயாநிதி மாறன் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பதாகவும், அதேபோல் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தயாநிதி மாறன் பேசியதாக கூறப்படுகிறது
இந்நிலையில் இது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்திருந்த புகாரில், பரப்புரையின் போது திமுக எம்பி தயாநிதி மாறன், பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டில் என் மகன் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பேசியது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் பாலியல் குற்றச்சாட்டில் என் மகனை உட்படுத்தி பேசிய தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி தனி நபரை களங்கப்படுத்தும் வகையில் பேசியதாக இரண்டு பிரிவுகளில் தயாநிதி மாறன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.