பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் திமுக வேட்பாளர், வரதராஜனுக்கு ஆதரவாக வாகன பேரணியில் ஈடுபட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மாலை 7 மணி வரை இறுதிக்கட்ட பரப்புரை நடைபெற்றது. அனைத்து கட்சி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியில், திமுக வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து மாபெரும் வாகன பேரணி நடைபெற்றது. பொள்ளாச்சி மஹாலிங்கபுரம் பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தின் முன்பிருந்து பேரணி தொடங்கியது.

பொள்ளாச்சி-கோவை ரோடு, பாலக்காடு ரோடு, மீன்கரை ரோடு மற்றும் பொள்ளாச்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாகனப் பேரணியில் சென்றவர்கள் வரதராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிஉள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனப் பேரணியில் பங்கேற்றனர்.