கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் இறுதிக்கட்ட பரப்புரை!

கோவை; கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.


கோவை; கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.



கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் பரப்புரையின் இறுதி நாளான இன்று காளப்பட்டி பகுதி 36 வது, 33 வது மற்றும் 35 வது வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



32 வதுவார்டுக்கு உட்பட்ட, பூங்கா நகர், பிருந்தாவன் நகர், சௌபாக்கியா நகர், அழகு நகர், விமான நிலையம் மற்றும் 33 வது வார்டுக்கு உட்பட்ட, காளப்பட்டி, சிவா நகர், அசோக் நகர் மற்றும் 35 வது வார்டுக்கு உட்பட்ட, அத்திக்குட்டை, பி.எல்.எஸ் நகர், லட்சுமி நகர், கள்ளிமேடு ஆகிய இடங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்ட அவர், இறுதியாக ஆர்.ஜி.புதூரில் தனது பரப்புரையை நிறைவு செய்தார்.



இந்த பரப்புரையில் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் டி.பி.சுப்பிரமணியம் (தி.மு.க), சி.வி.தங்கவேலு (ம.தி.மு.க) மற்றும் சி.பி.எம் கட்சியின் கனகராஜ், சி.பி.ஐ கட்சியின் சு.பா, கே.சி.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...