கோவை: பொள்ளாச்சியில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி நகருக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நகர் பகுதியில் தேர்தல் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பாலக்காடு சாலை, மாரியப்பன் வீதியில் வசித்து வரும் முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன் என்பவரது வீட்டில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக, பணம் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.