தமிழனின் அடையாளத்தை மாற்ற நினைக்கிறதா பாஜக? கோவை பிரச்சாரத்தில் ராதிகா சரத்குமார் கேள்வி!

கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை ஆதரித்து கூட்டணி கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகியான ராதிகா சரத்குமார் கோவை தெற்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை ஆதரித்து கூட்டணி கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகியான ராதிகா சரத்குமார் கோவை தெற்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும். இதுவரை மக்கள் இரண்டு பேரும் கட்சிகளை மட்டுமே மாறி மாறி தேர்ந்தெடுத்து ஏமாற்றத்தையே சந்தித்தார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.



திமுகவினர், அதிமுகவினரை திருடன் என்றும், அதிமுகவினர் திமுகவினரை திருடன் என்றும் திட்டிக் கொள்கிறார்கள். இதைப் போன்று திருடன் அல்லது ஊழல்வாதி என்ற குற்றச்சாட்டை எங்கள் கட்சியினர் மீது வைக்க முடியாது.

எதிர்கால சமுதாயத்திற்காக நேர்மையாக பாடுபடுகிறோம், எங்களை வரும் தேர்தலில் மக்கள் ஆதரிக்க வேண்டும். எங்களை பல கட்சிகளின் "பி டீம்" என்று குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால், நாங்கள் நேர்மையான டீம் என்பதை கூறிக்கொள்கிறேன்.



இன்று ஈஸ்டர் பண்டிகை என்பதால் கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

"பாஜக தலைவர் ஒருவர் பெரியாரை எதிர்க்கிறோம் என்று பேசியுள்ளார். பெரியார் கடவுள் நம்பிக்கை அற்றவர் தான் அதற்காக ஏன் அவரை எதிர்க்க வேண்டும். மேலும் தமிழனுக்கு தமிழன் என்ற அடையாளத்தை கொடுத்தது பெரியார் தான், பெரியாரை எதிர்க்கிறோம் என்று கூறுவதின் மூலம் அவர்கள் தமிழனின் அடையாளத்தை மாற்ற நினைக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்."



மாற்றத்திற்கான ஒரு விதையாக நாங்கள் இருப்போம். வரும் 6 ஆம் தேதி நடக்க உள்ள தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவளித்து டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து கமல்ஹாசன் அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் மாற்றத்தை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...