கோவை: கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் என கோவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை: கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் என கோவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கோவை என்றும் காணாத வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார். கோவையில் புதிய சாலைகளை அமைத்துள்ளதோடு, முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட்டு உள்ளது எனவும், இதன் மூலம் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், 6 புதிய அரசு கல்லூரிகள் அமைத்துள்ளோம் எனவும், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்த அவர், கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது எனவும், 2011 க்கு பிறகு கோவையில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை என்று தெரிவித்தார்.
அதேபோல, பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது எனவும் கூறிய அவர், வாக்களித்த மக்களுக்கு நன்றி உணர்வுடனும், மனசாட்சி உடனும் பணியாற்றி உள்ளோம் எனத் தெரிவித்தார்.
மேலும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் என்றவர், எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென்பதே கள நிலவரம் எனவும் அவர் தெரிவித்தார்.
திமுக முக்கிய நிர்வாகிகளிடம் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும், திமுகவினர் கள்ள ஒட்டு போடவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டிய அவர், அதிமுக அப்படி இல்லை என்று தெரிவித்தார்.