கிணத்துக்கடவு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்க புதிய கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் - திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் வாக்குறுதி!

கோவை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட கல்லாபுரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.


கோவை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட கல்லாபுரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கல்லாபுரம், கிணத்துக்கடவு நகரம்,நாச்சிபாளையம் ஆகிய பகுதியில் குறிச்சி பிரபாகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பேசியதாவது:-

கிணத்துக்கடவு மேற்குப் பகுதியில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. கடந்த ஐந்து வருடமாக எம்எல்ஏவாக இருந்த எட்டிமடை சண்முகம் அத்தியாவசிய பிரச்சினையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள் செய்து தரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.



அதேபோல, அமைச்சராக உள்ள எஸ்.பி.வேலுமணி மக்களைப் பற்றி கவலைப்படாமல் கொள்ளையடிப்பதிலும், கமிஷன் பெறுவதிலும் குறிக்கோளாக இருந்தார் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள்படி 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெறும் என சொல்லி இருப்பதாக கூறினார்.

அதன்படி திமுக ஆட்சி அமைந்தவுடன் கிணத்துக்கடவு மேற்குப் பகுதி ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து பேசினார்.



மேலும், மக்களைப் பற்றி துளியும் கூட கவலைப்படாமல் இருந்த அதிமுக ஆட்சியை மக்களாகிய நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் வாக்காளர்களிடம் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...