விதிமுறையை மீறி பூத் சிலிப் விநியோகிப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மீது வானதி சீனிவாசன் புகார்!

கோவை; தேர்தல் விதிமுறையை மீறி கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பூத் சிலிப் விநியோகிப்பதாக அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை; தேர்தல் விதிமுறையை மீறி கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பூத் சிலிப் விநியோகிப்பதாக அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நாளை மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது;

"கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் விதி முறைகளுக்கு எதிராக செயல்படுகிறார். உறுதிமொழி கடிதம் என்ற பெயரில் தொகுதி முழுவதும் பூத் சிலிப் வினியோகம் செய்து வருகிறார்.

பூத் சிலிப் வினியோகத்தை உடனடியாக தடுத்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், தேர்தல் விதிகளை மீறியதற்காக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தனது புகாருடன் மயூரா ஜெயக்குமார் விநியோகித்ததாக பூத் சிலிப் ஒன்றையும் ஆதாரமாக கொடுத்துள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...