வால்பாறை; வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதை ஒட்டி முன்கூட்டியே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்க திட்டமிட்டிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறையில் டாஸ்மாக் மதுக்கடைகள் தேர்தலை முன்னிட்டு நாளை முதல் மூன்று தினங்கள் மூடப்படுகின்றன. இந்நிலையில் இன்று பலர் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வீடுகளில் வைத்து கள்ளசந்தையில் விற்க முயற்சி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் வால்பாறையை அடுத்துள்ள பாலாஜி கோவில் பகுதியிலுள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 141 குவாட்டர் பிராந்தி பாட்டில்கள் 19 ஹால்ப் பிராந்தி பாட்டில்கள் 20 பீர் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த காட்டு துறை (36),ஆனந்த் (41) இருவரையும் வால்பாறை காவல்துறையினர் கைது செய்தனர்.