கோவை; தேர்தல் பறக்கும் படையினர் கோவை மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொண்ட சோதனைகளில் ஒரே நாளில் ரூ.1 கோடியே 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை; தேர்தல் பறக்கும் படையினர் கோவை மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொண்ட சோதனைகளில்ஒரே நாளில் ரூ.1 கோடியே 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 9 குழுக்கள் விதம் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் 3 குழுக்களாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
அதுபோலவே வீடியோ கண்காணிப்பு குழு ஒரு தொகுதிக்கு இரண்டு குழுக்கள் வீதம் 12 மணி நேரம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் துணை வட்டாட்சியர் நிலைக்கு குறையாத அலுவலர் தலைமையில் ஒரு சார்பு ஆய்வாளர், 2 காவலர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர் பணியாற்றி வருகின்றனர்.
தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ. 55.35 கோடி மதிப்பில் பணம், தங்க நகைகள், மதுபாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை தெற்கு தொகுதியில் இருந்து மட்டும் ரூ.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.