வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் உரிய ரசீது இல்லாத குக்கர்கள் பறிமுதல்!

உடுமலை; உரிய கொள்முதல் ரசீது இல்லாமல் உடுமலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடையில் வைக்கப்பட்டிருந்த குக்கர்களை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.


உடுமலை; உரிய கொள்முதல் ரசீது இல்லாமல் உடுமலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடையில் வைக்கப்பட்டிருந்த குக்கர்களை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.

உடுமலையில் உள்ள ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தேர்தலுக்காக இலவசமாக தருவதற்கு ஏராளமான குக்கர்கள் வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அமமுகவினர்தான் இவ்வாறு குக்கர்களை விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் பரவியது.



தகவலின் அடிப்படையில் உடுமலை வஉசி வீதியிலுள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். லாரிகளில் இருந்து கடையில் இறக்கப்பட்ட குக்கர் பார்சல்களுக்கு உரிய கொள்முதல் ரசீதுகள் கடை உரிமையாளரிடம் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து கடையில் வழக்கமாக எத்தனை குக்கர்கள் விற்பனை ஆகும். இதற்கு முன்பு இது போல அதிக குக்கர்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறதா என்று விசாரணை செய்தனர். கடையின் உரிமையாளர் அளித்த பதிலில் திருப்தி இல்லாததால் குக்கர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குக்கர்கள்வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...