அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்து விட்டதாக தமிமுன் அன்சாரி பேச்சு!

கோவை; சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் திமுக ஆட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்து விட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.


கோவை; சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் திமுக ஆட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்து விட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து குறிச்சி பகுதியில் உள்ள என்.பி இட்டேரி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;



“சட்டப்பேரவைத் தேர்தல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு அனுபவத்தை தரக்கூடியது. ஜனநாயகம், சமூக நீதி, சமூக நல்லிணக்கத்தை காக்கக்கூடிய அறப்போராட்டம் தற்போது நடக்கிறது. எதிர்கால தலைமுறையின் நலன் காக்கவும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கவும், தமிழ் தேசியம், பண்பாடு கலாச்சாரத்தை நிலைநிறுத்த திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்தது.



சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள் திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க முடிவு செய்துவிட்டனர் தமிழகத்தில் திமுக கூட்டணி 200க்கும் அதிகமான இடத்தில் வெற்றி பெறும். தமிழக மக்கள், ஆட்சி மாற்றத்தைக் காண காத்திருக்கின்றனர்.



10 ஆண்டு காலம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்,பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், குடியுரிமை சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் போன்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவதாக தெரிவித்ததை அடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.” இவ்வாறு தமிமுன் அன்சாரி பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...