பொள்ளாச்சி; அனைத்து மதத்தினருக்கும் அதிமுகதான் பாதுகாப்பு என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சியில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் வேடமணிந்து நூதன முறையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு அதிமுகதான் என்பதை வலியுறுத்தி இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் வேடமணிந்து நூதன முறையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை மாலை 7 முடியுடன் பரப்புரை முடிவடைகிறது. இதையடுத்து அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு அக்கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர் பொள்ளாச்சி நகர 16, 28வது வார்டு நிர்வாகிகள் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பாதுகாப்பாக இருப்பது அதிமுக ஆட்சிதான் என்பதை பொதுமக்களிடம் வலியுறுத்தும் விதமாக பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் போல் வேடம் அணிந்தவர்கள் வெங்கட்ரமணன் வீதி, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வாக்கு சேகரித்தனர். முன்னாள் நகரமன்ற உறுப்பினர் முரட்டுக்காளை, முரளி மாவட்ட பிரதிநிதி அருணாசலம் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரித்தனர்.