தேர்தல் அமைதியாக நடைபெற எல்லை பாதுகாப்பு படையினர் காவல் துறையுடன் இணைந்து கொடி அணிவகுப்பு!

வால்பாறை; தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.


வால்பாறை; தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அன்று பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.



இதையடுத்து வால்பாறை தபால் நிலையம் முன்பு இருந்து வால்பாறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் கொடி அணிவகுப்பு தொடங்கியது.



அணிவகுப்பில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் காவலர்கள் மற்றும் 30 எல்லை பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.



பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வளாகம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக சென்ற அணிவகுப்பு புதிய பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது. இன்று முதல் எல்லை பாதுகாப்பு படையினர் வால்பாறை நகரம் முழுவதும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...