கோவை; கிணத்துக்கடவு திமுக வேட்பாளருக்கு அக்கட்சியின் மகளிர் அணியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்

இந்த நிலையில் கோவை மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சக்தி சரண்யா தலைமையில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சங்கராயபுரம், நல்லியன்குட்டை புதூர், 10 புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு வாக்கு சேகரித்தனர்.

கிராம பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், கிராமப்புற பெண் தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்திற்கு சென்று திமுகவுக்கு வாக்கு சேகரித்தனர்.

மேலும் அப்போது, திமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் நலத் திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனர்.