நீலகிரி; கோத்தகிரியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக 4 அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைகிறது. வேட்பாளர்கள் கடைசி கட்ட தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் கடைசி நிமிடத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்று விடும் முனைப்பில் உள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பறக்கும் படையினர் கண்காணிப்பின்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடை வீதியில் பணம் பட்டுவாடாவில் ஈடுபட்ட 4 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் அதிமுகவினர் என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ. 59,500 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக பி.சுப்ரமணி, எம்.சுப்பிரமணி, சிவராஜ் முருகன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். பின்னர் 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.