கோவை: தமிழக மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் தலைமையில் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. அதில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பிணையில் வரமுடியாத பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், கோவை மாவட்டத்தில் 22 பேர் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.
கோவை வடவள்ளியில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அதிமுக நிர்வாகி சந்திரசேகர், திமுக வேட்பாளர்களுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வெளியான நிலையில், அவர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரை கைது செய்ய வடவள்ளி போலீசார், இன்று சென்றபோது அவர் முன்ஜாமீன் பெற்ற ஆணையை காண்பித்ததால், அவர் கைது செய்யப்படவில்லை, என்று கூறப்படுகிறது.
அதேபோல, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் கடந்த 28ஆம் தேதி திமுகவிற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சபரிமாலா பிரச்சாரத்திற்கு வந்தபோது அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டு தகராறு ஏற்பட்டதாக திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், அதிமுக தரப்பிலும் திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகார்களின் அடிப்படையில் இருதரப்பினர் மீதும் வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், திமுக தரப்பில், திமுக வேட்பாளர் வரதராஜன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று நேற்று கோவை மாவட்ட எஸ்பி உத்தரவின்படி, காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேர்தல் நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.