புதிய அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என வானதி சீனிவாசன் அறிவுறுத்தல்!

கோவை; புதிய அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் சீனிவாசன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.


கோவை; புதிய அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் சீனிவாசன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் புகார் மனு அளித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;



“அதிகாரிகளை மாற்றம் செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமை. புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எதிர்க் கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடாது. பா.ஜ.க இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை திட்டமிட்டு ஏற்படுத்தியது போல சமூக வலைதளங்களில் பரப்பபடுகிறது. ஊர்வலத்தின் முன்னால் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும். கல்வீச்சு சம்பவம் காவல் துறையின் அலட்சியத்தால் தான் நடந்தது.

ஐ.ஜி அமல்ராஜ், எஸ்.பி ஆகியோரிடம் அதிமுகவினர் புகார் கொடுத்தால் எப்.ஐ.ஆர் போடுவதில்லை. திமுக புகார் கொடுத்தால் எப் ஐ ஆர் போடுவதாக தகவல் வருகிறது. மாற்றப்பட்ட அதிகாரிகள் திமுகவிற்கு ஆதரவாக இருப்பதாக எண்ணும் அளவிற்கு அவர்கள் செயல்பாடுகள் இருக்கிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்ப உள்ளோம். யாரும் என் பெயரில் விளம்பரம் கொடுக்க கூடாதுஎன பத்திரிகைகளுக்கு தகவல் கொடுத்துள்ளேன் கல்வீச்சு வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கல்வீச்சு விவகாரத்தில் அதிமுக பாஜகவை கைவிட்டு விட்டதாக பார்க்க மாட்டேன்.

நான் அங்கு சென்று பிரச்சினை ஆக கூடாது என்பதால் தவிர்த்து வருகின்றோம். தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தி அரசியல் பண்ணுவதில் உடன்பாடு இல்லை. எங்கள் வாகனத்தில் பணம், பரிசு கூப்பன், செக் புக், டோக்கன் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

தொண்டாமுத்தூர் தொகுதியில் பாஜகவினரை இரவு 12 மணி வரை காவல்துறையினர் பிடித்து வைத்து சாப்பிட கூட விடாமல் துன்புறுத்திஇருக்கின்றனர். அவர்களிடம் இருந்து எதுவும் பறிமுதல் செய்யவில்லை. காவல் நிலையத்தில் பா.ஜ.கவினரை நடத்திய விதத்தை கடுமையாக கண்டிக்கிறேன்.காவல் துறை தரப்பில் தவறாக தகவல் கொடுக்கப்படுகிறது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும்.” இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...