கோவை தெற்கு தொகுதி: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பா.ஜ.கவினர் 12 பேர் மீது வழக்கு பதிவு

கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சலீவன் வீதி பகுதியில் பா.ஜ.கவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, வெரைட்டி ஹால் ரோடு போலீஸார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சலீவன் வீதி பகுதியில் பா.ஜ.கவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, வெரைட்டி ஹால் ரோடு போலீஸார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சலீவன் வீதி பகுதியில் பா.ஜ.கவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கிருந்த பா.ஜ.கவை சேர்ந்த நபர்களை கலைந்து போகும் படி சொன்ன போது, அவர்கள் அதிகாரிகளின் உத்திரவிற்கு கீழ்படியாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்த பா.ஜ.கவினர் கருணாகரன், சேகர் உட்பட 12 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீஸார், அவர்களிடம் இருத்து 6 வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அவர்களிடம் இருந்து ரூபாய் 46,000 பணம் மற்றும் 1000 ரூபாய் பரிசு கூப்பன், 500 ரூபாய் பரிசு கூப்பன், பா.ஜ.க தொப்பிகள், கொடிகள், வாக்காளர் பட்டியல், காசோலைகள், ஏடிஎம் கார்டு, கிரிடெட் கார்டு உட்பட பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்ததாக காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட 12 பேர் மீதும் அரசு அதிகாரிகள் உத்தரவு கீழ்படியாதது, அத்துமீறுதல், கலகம் செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், 12 பேரையும் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.



பறிமுதல் செய்யப்பட்ட ஆறு வாகனங்களும் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...