கோவை: கோவை மாவட்ட கூடுதல் எஸ்.பி. அனிதா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
கோவை: கோவை மாவட்ட கூடுதல் எஸ்.பி. அனிதா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தேர்தலில் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக பல்வேறு போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது திமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாமணி, காவல் ஆணையர் சுமித் சரண், ஐ.ஜி தினகரன், எஸ்.பி அருளரசு, ஆகியோரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக பணிபுரிந்து சமீபத்தில் போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக நியமிக்கப்பட்ட அனிதாவை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அனிதா காத்திருப்போர் பட்டியல் வைக்கப்பட்டார்.