கோவை: சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பு அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கோவை: சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பு அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஈழுவா திய்யா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோவையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, அவர்கள் தெரிவித்ததாவது:
கடந்த 40 ஆண்டு காலமாக எங்களின் கோரிக்கையான ஈழுவா திய்யா சமூக மக்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில் இதில் கூட்டமைப்பு சார்பாக ஆதரிக்கிறோம்.
இதை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதனைத் தொடர்ந்து, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் எங்கும் உள்ள எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும், உங்கள் சமுதாய மக்களின் வாழ்வாதாரம் இளைய தலைமுறையினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அதிமுக கூட்டணியை ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.