வால்பாறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோகிலா பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு!

கோவை: வால்பாறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோகிலா பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: வால்பாறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோகிலா பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வால்பாறை உருளிகள் எஸ்டேட்டை சேர்ந்த கோகிலா என்பவர் போட்டியிடுகிறார். இரண்டு நாட்களாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் உருளிகள் எஸ்டேட், பழைய வால்பாறை எஸ்டேட், கருமலை எஸ்டேட், பச்சமலை எஸ்டேட் போன்ற பகுதிகளுக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



மேலும், வால்பாறையில் உள்ள வில்லோனி செட்டில்மெண்ட், நெடுங்குன்றம் செட்டில்மெண்ட், காடம்பாரை செட்டில்மெண்ட் பகுதிக்கு சென்று ஆதிவாசி பழங்குடியினர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காகவும் தொழில் வரி ரத்து செய்யவும் இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த வீடு வழங்கியது போல வால்பாறையில் சொந்த வீடு வழங்கப் பாடுபடுவேன் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், ஆதிவாசி பழங்குடி மக்களை சந்தித்து மின்சாரம் சாலை வசதி வீட்டு வசதி போன்றவை செய்து தருவதாகவும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...