திமுக என்றாலே நில அபகரிப்பு, மின்வெட்டுதான் என எச்சரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

கோவை; திமுக என்றாலே நில‍ அபகரிப்பு, மின்வெட்டு தான் நினைவு வரும் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தி உள்ளார்.


கோவை; திமுக என்றாலே நில‍ அபகரிப்பு, மின்வெட்டு தான் நினைவு வரும் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தி உள்ளார்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராமை ஆதரித்து சிங்காநல்லூர் அருகே இன்று இரவு நடந்த பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:



“சிங்காநல்லூர் எம்எல்ஏவாக இருந்த திமுகவை சேர்ந்த கார்த்திக் எந்த ஒரு வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளாமல் சட்டமன்ற கூட்டத் தொடரில் இருந்து வெளிநடப்பு செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயராம், கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில் இத்தொகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை தனது சொந்த பணத்தில் செய்து கொடுத்தவர்.

கோவையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கோவை மாவட்டமும் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பல மேம்பாலங்கள் முடிவடையும்தருவாயில் உள்ளன.



70 ஆண்டு கால பிரச்சினையாக இருந்த அவிநாசி- அத்திக்கடவு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு திமுக எதுவும் செய்யவில்லை. ஸ்டாலின் இதற்கு முன் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியவர். அவருக்கு எதுவுமே தெரியாது. யாரேனும் ஒருவர் துண்டு சீட்டில் எழுதிக் கொடுப்பதை மட்டுமே படிக்கக்கூடியவர்.

கருணாநிதி இருந்தவரை கட்சியின் தலைமை பதவியில் ஸ்டாலினை உட்கார வைக்கவில்லை. அவர் இறந்தபிறகு பின் வாசல் வழியாக தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வாகனங்களில் தொங்கிக் கொண்டு செல்லும் அவல நிலையில் உள்ளனர். மூத்த நிர்வாகிகளுக்கு அந்த கட்சி கொடுக்கும் மரியாதைக்கு இதுவே சான்று.

இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க அப்போது மத்திய அரசுக்கு உதவியது திமுகவின் மன்னிக்க முடியாத துரோகம். ரஜினிகாந்த் கூட விக் வைக்காமல் வெளியே வருகிறார். ஆனால் ஸ்டாலின் நோய்த்தொற்று பரவல் காலத்தில் வீட்டுக்குள் இருந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங் முறையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.



திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, மின்வெட்டு நில அபகரிப்பு தான் இருக்கும். அக்கட்சியின் பெயரைச் சொன்னாலே அது தான் நினைவுக்கு வரும். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நாங்கள் திட்டங்களை செய்துவிட்டு மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். இதை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக வேட்பாளர் ஜெயராம் வெற்றி பெற்றபின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்வார் என உறுதி அளிக்கிறேன்.” இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...