எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

கோவை; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.


கோவை; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.



சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா. கார்த்திக்கை ஆதரித்து அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பீளமேடு ரொட்டிகடை மைதானத்தில் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:



“சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற மக்கள் உதவ வேண்டும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் எதிர்தரப்பு வேட்பாளரை மோடியாககருதி அனைவரையும் தோற்கடிக்க களப்பணியாற்ற வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. சசிகலாவால் நியமிக்கப்பட்டவர். அவருக்கும் கூட விசுவாசமாக இல்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அப்போலோ மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டார் என்பது உள்ளிட்ட பல பொய்களை தொடர்ந்து கூறி மக்களை ஏமாற்றினார்.



திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நாங்கள் சொல்வதை தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம். வெற்றி பெற்ற பின் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

பாஜக தலைவர்கள் குறித்து நான் அவதூறு பேசியதாக என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர், ஆனால் என்னைப் பற்றி அக்கட்சியினர் விமர்சனம் செய்ததால் அதற்கு பதில் கூறும் விதமாகமட்டும்தான்மோடி முதல்வராக குஜராத்தில் பதவியேற்றது குறித்து நான் பேசினேன்.



கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மோடி அடிக்கல் நாட்டினார். அந்த செங்கலை நான் எடுத்து வந்து விட்டேன் என்று புகார் கூறியுள்ளனர். மே 2க்கு பின் செங்கலை நான் திருப்பி தந்துவிடுவேன் என்று கூறி உள்ளேன். சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திக்கை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...