ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் வீடிழந்தவர்களுக்கு அவ்விடத்திலிருந்து 2 கிலோமீட்டருக்குள் வீடு என சண்முகசுந்தரம் உறுதி!

கோவை; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு 2 கி.மீ தூரத்தில் வீடு கட்டித்தரப்படும் என கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் வாக்குறுதி அளித்துள்ளார்.



கோவை; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு 2 கி.மீ தூரத்தில் வீடு கட்டித்தரப்படும் என கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் வாக்குறுதி அளித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கோவை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் பூசாரிபாளையம் முத்தண்ணன் குளம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் மக்களிடம் கூறியதாவது;

“ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் முத்தண்ணன் குளம் பகுதியில் இரண்டு தலைமுறைகளாக வசித்து வந்த மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களது வேலை வாய்ப்பு குழந்தைகள் கல்வி என்ன வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது.

அப்புறப்படுத்தாமல் அருகிலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும் என அவர்கள் போராடினர். அவர்களுடன் இணைந்து நானும் போராடினேன். தற்காலிகமாக காலி செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களின் கோரிக்கையை ஏற்று 2 கிலோமீட்டர் தொலைவில் வீடு கட்டிக் கொடுக்கப்படும்.” இவ்வாறு வ.ம.சண்முகசுந்தரம் வாக்குறுதி அளித்தார். பரப்புரையின்போது பொறுப்புக் குழு உறுப்பினர்கள் குப்புசாமி துரைசாமி கருணாநிதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...