மூன்று முறை பேரூராட்சி தலைவராக இருந்த வ.ம சண்முகசுந்தரத்தை வெற்றி பெற செய்து சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள் - கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

கோவை: கோவை வடக்கு திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரத்தை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் வெற்றிபெறுவதை விட, வ.ம. சண்முகசுந்தரம் வெற்றி பெறுவது நான் எனக்கு முக்கியம்.



கோவை வடக்கு திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரத்தை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் வெற்றிபெறுவதை விட, வ.ம. சண்முகசுந்தரம் வெற்றி பெறுவது நான் எனக்கு முக்கியம்.

கோவை: வருகிற தேர்தலில், எடப்பாடியையும், பணத்தை செல்லாக் காசாக்கிய மோடியையும் செல்லாக்காசு ஆக்க வேண்டும், என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோவை வடக்கு திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரத்தை ஆதரித்து செய்த பிரச்சாரத்தின் போது பேசினார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அதிலிருந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இன்னும் தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், இன்று கோவையில் முகாமிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.



சற்று முன்பு, கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரத்தை ஆதரித்து, வடவள்ளி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது, பேசிய அவர், பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்தீர்கள். பாராளுமன்ற தேர்தலின் போது, இந்தியா முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால், தமிழகத்தில் எவ்வளவு சீட் ஜெயித்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், தனது சட்டைபையில் இருந்து பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்த, உதயநிதி ஸ்டாலின், "மோடி, இந்த 1000 ரூபாய் நோட்டை தான் பணமதிப்பிழப்பு என்ற பெயரில் செல்லாக் காசாக்கினார். இதே போன்று, மோடியையும், பழனிச்சாமியையும் செல்லாக்காசாக்க வாய்ப்பு இ கிடைத்துள்ளது" என்று விமர்சித்தார்.



அனைவரும், எய்ம்ஸ் மருத்துவமனையை தேடிக் கொண்டிருக்கின்றனர்.நான், மோடி நட்டு வைத்த எய்ம்ஸ் மருத்துவமனைையை எடுத்து வந்துவிட்டேன் என்று செங்களை காண்பித்த, உதயநிதி ஸ்டாலின். இன்னும் கொஞ்சம் விட்டோம் என்றால் தமிழகத்தையே மோடியிடம் விற்று விடுவார்கள், என்று சாடினார்.

"வேலுமணின் பினாமி, சந்திரசேகர் பல கோடி ஊழல் செய்துள்ளார். ஆட்சி மாறுபோதும் அனைவரும் உள்ளே செல்வார்கள். நான் எடப்பாடி தொகுதிக்கு சென்றேன், எடப்பாடி தொகுதியே நமது சின்னத்திற்கு மாறும்", என்றார்.



ஏற்கனவே, வடவள்ளி பேரூராட்சியின் மூன்று முறை தலைவராக வேட்பாளர் சண்முகசுந்தரம் இருந்துள்ளார். சாலை, குடிநீர் வசதி என அடிப்படை வசதிகள் பலவற்றை செய்துகொடுத்துள்ளார். இப்பகுதியில், வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியவர் சண்முக சுந்தரம் தான், என்று புகழாரம் சூட்டினார்.



முதல் முறையாக வேட்பாளராக நான் கலைஞர் கருணாநிதி வென்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். எனது தொகுதி வெற்றி எனக்கு முக்கியம் அல்ல. இந்த தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தின் வெற்றிதான் எனக்கு முக்கியம்..கலைஞரின் பேரானாக பெருமையாக கேட்கிறேன் கோவை வடக்கு திமுக வேட்பாளரான சண்முகசுந்தரத்தை வெற்றி பெறச்செய்து சட்டசபைக்கு அனுப்புங்கள்.



இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மட்டும் கட்சியினர் மத்தியில் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...