கோவை; கவுண்டம்பாளையம் தொகுதியில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வாய்ப்பு தரும்படி மநீம வேட்பாளர் சுரபி பங்கஜ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

மக்கள் நீதி மய்யம் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் சுரபி பங்கஜ் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் சரவணம்பட்டி, கீரணத்தம், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், கவுண்டம்பாளையம் தொகுதியைச் சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளதாக உறுதி அளித்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் குறைகளை அவரிடம் தெரிவித்தனர். அதற்கு தான் வெற்றிபெற்றால் நிச்சயம் குறைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் சுரபி பங்கஜை ஆதரித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று அவருக்கு ஆதரவாகவும் வாக்கும் சேகரித்தனர்.