பாஜக தலைவர்கள் பற்றி பேச உதயநிதிக்கு அருகதையில்லை என வானதி சீனிவாசன் பதிலடி!

கோவை: பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதையில்லை வானதி சீனிவாசன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.


கோவை: பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு அருகதையில்லை வானதி சீனிவாசன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் தேர்தல் பணிமனையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:



“உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரைக்காக கோவை வந்திருந்தபோது நடந்த சில சம்பவங்களில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போல தவறாக சித்தரித்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

காவல்துறை பாதுகாப்பு குறைவாக இருந்த இடத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட சலசலப்பு குறித்து தீர விசாரிக்க வேண்டும். பா.ஜ.க அனைவருக்குமான கட்சியாக செயல்படுகிறது. எந்த மத உணர்வுக்கும் பாஜக எதிரானதல்ல. சிலர் பாஜக மீது பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடி மற்றும் டீசர்ட்டுகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவதாக தகவல் வந்துள்ளது. வாக்கு வங்கிக்காக மக்களிடையே பிரிவை உண்டாக்கும் சக்திகளை மக்கள் ஒதுக்க வேண்டும். கல்வீச்சு சம்பவம் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும்.

மறைந்த பாஜக தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது அவரது அரசியல் அறியாமையை காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் குறித்து பேச எந்த அருகதையும் கிடையாது. வாக்கு வங்கிக்காக பிரிவினையை தூண்டும் அரசியலை செய்வது திமுக தான்.” இவ்வாறு வானதி சீனிவாசன் பேட்டியளித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...