போதிய கழிப்பறை வசதி கூட இல்லாமல் தவிக்கும் கல்லுக்குழி பகுதி மக்களை, கமல்ஹாசன் நேரில் சந்திப்பு..!

கோவை: கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கமல்ஹாசன், இன்று அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கல்லுக்குழி பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கமல்ஹாசன், இன்று அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கல்லுக்குழி பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.



சமீபத்தில் கமல்ஹாசனின் காலில் அறுவை சிகிச்சை செய்யப்படாததால், தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், கால் வலி குறைய வாக்கிங் ஸ்டிக் ஐ பிடித்தபடி அவர் கல்லுக்குழி பகுதியில் நடந்து சென்றார்.



அப்போது, அங்கிருந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று, அவர் கால் வலி மற்றும் உடல் நிலை குறித்தும் விசாரித்தனர்.

தொழில் நகரமான கோவையில் வளர்ச்சியடைந்த பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு அருகே தான் வார்டு 71- ல் கல்லுக்குழி என்ற பகுதியும் உள்ளது. கழிப்பிட வசதி, கூட இல்லாமல் வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு பொதுக்கழிப்பிட வசதி கூட கிடையாது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், ஆஸ்பட்டால், தகரங்கள் கொண்ட கூரைகளுக்கு கீழ் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

நகரத்தில் உள்ள குப்பைகளை இப்பகுதியில் கொட்டுவது, சுகாதரமான குடிநீர் வசதி இல்லாதது, போன்ற பல பிரச்சனைகளுடன் வாழ்ந்து வரும் மக்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

அப்பகுதி பெண்கள் கழிப்பறை இல்லாததால், அவர்கள் அனுபவித்து வரும் இன்னல்களை எடுத்துரைத்தனர். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும், எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. எங்கள் பிரச்சனைகளை யாரும் கவனிப்பதில்லை. தாழ்வான பகுதியில் இருப்பதால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம், என்று முறையிட்டனர்.



மக்களிடம் பேசிய கமல்ஹாசன், "நான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை. உங்களை சந்தித்து உங்களின் தேவைகள் என்ன என்பதை கேட்க வந்திருக்கிறேன். உங்களின் தேவைகளை நீங்கள் கேட்பது உங்கள் உரிமை. அதை நினைவுப்படுத்துவதே என் கடமை. உங்களுக்கு அடிப்பை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...