நீலகிரியில் வன விலங்கு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாததால் நோட்டாவிற்கு வாக்களிக்க முடிவு!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட வில்லை என கூறி, வரும் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்கப் போவதாக மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட வில்லை என கூறி, வரும் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்கப் போவதாக மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோத்தகிரி அருகே உள்ள மிளித்தேன் பகுதியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் தலைவர் தும்பூர் ஐ போஜன், மாநில பொதுச் செயலாளர் குள்ளா கவுடர் வினோதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் தேயிலை மற்றும் மலை தோட்ட காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதியை கொண்டுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதும், இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் கண்காணித்து இவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், தமிழக அரசு வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தொகையினை வழங்க வேண்டும், மேலும் தனியார் தோட்டங்களில் வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்களை விவசாயிகளே வெட்டி விற்க அனுமதி தர வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து விளை நிலங்களுக்கும் தனி பட்டா பாஸ்புக் வழங்க வேண்டும் என தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம். இல்லை என்றால் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைமாவட்ட சிறு விவசாயிகள் நோட்டாவிற்கு வாக்களிப்போம் என முடிவெடுத்து இதனை அனைத்து கிராமங்களுக்கும் சென்று அறிவித்து வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...