கோவை: பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து இன்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தனர். இந்தியாவின் மிகப்பெரிய மூன்றாவது கட்சி என்று அந்தஸ்தையும் திமுக பெற்றது இதற்கு தமிழக மக்கள் தான் முக்கிய காரணம். அதனால் பாரத பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது கோபத்தில் உள்ளார்.
ஆனால், தமிழக மக்கள் அவர் மீது மிகப்பெரிய கோபத்தில் உள்ளனர். பணமதிப்பு இழப்பை கொண்டுவந்து பழைய ரூபாய் நோட்டுகளை செல்லாக்காசாகி, மக்களை முட்டாளாக்கிய ஆகிய பாஜகவை இந்த தேர்தலில் செல்லாக்காசாக வேண்டும் என்றும், எடப்பாடி தொகுதியிலேயே திமுக வேட்பாளர் வெற்றி பெறும் நிலையும், முதல்வர் பழனிசாமி தோற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி எனவும், அதிமுக அமைச்சர்களை அடைப்பதற்கு இன்றைய புதிய சிறை கட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சசிகலாவின் காலை பிடித்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அருகில் வைத்துக்கொண்டு, பிரதமர் மோடி தன்னை குறுக்கு வழியில் வந்தவர் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், எனக்கு தமிழக மக்களின் முன்னேற்றமே முக்கியம் என்றும், தன்னைப் பற்றி குறை கூறும்அமித்ஷாவின் மகன் 3 ஆண்டுகளில் 120 கோடி சொத்து சேர்த்துள்ளார் என்றும், இன்று என் தங்கை செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தும் மத்திய அரசு தைரியமிருந்தால் என் வீட்டில் சோதனை நடத்தும் என்றும் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியை கட்டாயப்படுத்தி கட்சியில் இணைய சொல்லி நெஞ்சு வலி வர வைத்த கட்சிதான் பாஜக என்றும் விமர்சனம் செய்தார். மேலும், திமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என்றும், பொள்ளாச்சி மக்களின் கோரிக்கை வைத்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.