கோவை: கமல்ஹாசன் டார்ச் லைட்டை வீசியது சித்தரிக்கப்பட்டதாக மநீம நட்சத்திர பேச்சாளர் ஸ்ரீபிரியா தெரிவித்தார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யத்தின் மயிலாப்பூர் வேட்பாளரும் நட்சத்திர பேச்சாளருமான ஸ்ரீபிரியா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், மக்கள் நீதி மய்யத்திற்கு கோவையில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார். மக்களுக்காக கமலஹாசன் உயிரை கொடுத்து சேவை செய்வார் என்றும் அவருக்கு அணிலாக இருந்து பிரச்சாரம் மேற்கொள்வேன் என்றும் கூறினார்.
மேலும், கோவை மக்கள் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் கோவை தெற்கு தொகுதியில் கமல் வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்தார். நடிகர் ராதாரவி மறைமுகமாக கமலுக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று கூறிய அவர், ராதாரவி கமலை பற்றி விமர்சித்து பேசுவது கமலஹாசனுக்கு ஆதரவாக தான் உள்ளது என்றும் எனவே அவரின் விமர்சனம் கமலுக்கு வெற்றியாக அமையும் என்றும் கூறினார்.
மேலும், அதுமட்டுமின்றி புதுவையில் கமலஹாசன் மைக் வேலை செய்யவில்லை என்று டார்ச் லைட்டை வீசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அது சித்தரிக்கப்பட்டது. அது வெட்டி ஒட்டப்பட்டது என்றும் பதிலளித்தார்.