கோவை: சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்பது சாதி மோதல்களுக்கு வழிவகுக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பேரூர் ஆதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பேரூர் ஆதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் கூறியதாவது;

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து சமய நம்பிக்கையையும், இந்து கலாச்சாரம், வழிபாட்டு முறை, கோவில்கள், கடவுள்கள், தமிழ் கடவுள் முருகன்,கந்த சஷ்டி கவசம் ஆகியவற்றை இழிவுபடுத்தும் இந்து விரோத சக்திகள், சில அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.
இது போன்ற இந்து விரோதிகளுக்கு எதிராக இந்துக்கள் ஒருங்கிணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். மேலும், இந்து கோவில்களையும், இந்து கலாச்சாரத்தின் பண்பாட்டையும் பாதுகாக்கின்ற, ஆன்மீகத்தின் மீது பற்று கொண்டு இந்துக்களின் நலன் காக்கும் அரசியல் கட்சிக்கு ஓட்டளிப்போம். வெளிப்படையாக இந்துக்கள் என்று தெரிவிப்பவர்களுக்கு இந்துக்கள் ஓட்டு போடுவார்கள்.
சாதி மறுப்பு திருமணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூபாய் 60 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, தமிழகத்தில் சாதி மோதல்களுக்கு வழிவகுக்கும். இலக்கியம், ஊடகங்கள் வாயிலாக இந்து சமய நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருபவர்களையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் புறக்கணிக்கிறோம்.
கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினர்களுக்கு சலுகைகள் வழங்குகிறார்கள், ஆனால் நம்மை பெரும்பான்மை என்று குறிப்பிடாமல் சிறுபான்மை அல்லாதவர்கள் என்று குறிப்பிடும் நிலையை மாற்ற வேண்டும்”. இவ்வாறு பேரூர் ஆதீனம் ஸ்ரீ மருதாசல அடிகளார் கூறினார்.